Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் அஜித் : பிரபல சேனல் நடத்திய கருத்துக் கணிப்பு

Webdunia
சனி, 19 மார்ச் 2016 (11:25 IST)
தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக் கணிப்பில் சுமார் 46.88% வாக்குகள் பெற்று அஜீத் முதல் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் சிறந்த நடிகராக அஜீத் தென்னிந்தியா அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 


 

பிரபல ஆங்கில செய்தி சேனல், தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துகணிப்பு பட்டியலில் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களின் முன்னணி நாடிகர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. மேலும், அவர்கள் நடிப்பில் வெளியான படங்களும் இடம்பெற்றன. இதில் தமிழ் நாட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், அஜீத், விஜய் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது

இந்நிலையில், அந்த சேனல் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவை நேற்று வெளியிட்டது. இதில் சுமார் 46.88% வாக்குகளுடன் தென்னிந்தியாவின் சிறந்த நடிகராக அஜீத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேப்போல் 42.58% வாக்குகளுடன் 2 வது இடத்தை பிரபல மலையாள நடிகர் மம்முட்டி பெற்றிருக்கிறார். 

மேலும், பாகுபலி படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் 40.01% வாக்குகளுடன் 3 வது இடத்தையும், பிருத்விராஜ் 2.27% வாக்குகளுடன் 4 வது இடத்தையும் பெற்றிருக்கின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் மம்முட்டி, பிரபாஸ், சுதீப், விக்ரம் போன்ற நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி  அஜீத் முதலிடம் பெற்றுள்ளார். ஆனால், ரஜினிகாந்த், கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த தல ரசிகர்கள் தற்போது உற்சாக மிகுதியில் திகைத்துள்ளனர்.

சூரியின் கருடன் படத்தின் டிரைலர் & ஆடியோ லான்ச் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

5 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹரிஷ் கல்யாணின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

ரிலீஸுக்கு தயாராகும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ‘கொட்டுக்காளி’

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

Show comments