Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த படத்துக்கு அவர்தான் இயக்குனர்… உறுதியாக இருந்த அஜித் தரப்பு!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (07:02 IST)
அஜித் இப்போது தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

இந்த படத்தை முதலில் கோ, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவன மான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பேன் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்போது அந்த தகவலில் உண்மையில்லை என்றும், ஆதிக் ரவிச்சந்திரன்தான் அந்த படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர்தான் அந்த படத்தை இயக்க வேண்டும் என்பதில் அஜித் தரப்பு உறுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிங்கம் களம் இறங்கிடுச்சே.. விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்? - ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments