Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் அஜித்- விஜய் படங்கள் ரிலீஸ்?

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (09:18 IST)
அஜித் 61 படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் பின்னர் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மேலும் தாமதம் ஆகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூழல் உருவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments