Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் என்ன கொலகாரனா?’… ரசிகரிடம் ஜாலியாக உரையாடும் அஜித்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (08:52 IST)
நடிகர் அஜித் இப்போது வட இந்தியாவில் தன்னுடைய இரு சக்கரவாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளார்.

பிரபல நடிகரான அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். சமீபத்தில் ஐரோப்பா சென்ற அவர் இதுபோல பைக்கில் அந்த கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

அதன் பின்னர் அஜித் 61 படத்தில் சில நாட்கள் நடித்த அவர் இப்போது லடாக் லாங் பைக் ரைடு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டி சென்றது வைரலானது.

இந்நிலையில் இப்போது ரசிகர் ஒருவரோடு அஜித் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித்திடம் ரசிகர் “சார் உங்கள 3 நாளா தேடிகிட்டு இருந்தோம்” என சொல்ல அஜித் “நான் என்ன கொலகாரனா இல்ல கொள்ள காரனா?... என்ன ஏன் தேடுறீங்க” என்க் கேட்டு ஜாலியாக பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments