Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்‌ஷன் காட்சியோடு தொடங்கிய அஜித் பட ஷூட்டிங்!

vinoth
புதன், 15 மே 2024 (06:46 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் லைகா நிறுவனத்தின் பொருளாதார காரணங்களால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஜூனில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மே 10 ஆம் தேத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அறிவிக்கப்ப்பட்டதற்கு ஒரு நாள் முன்பாகவே மே 9 ஆம் தேதி எளிமையான பூஜையோடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஆரம்ப கட்ட ஷூட்டிங்கே ஒரு ஆக்‌ஷன் காட்சியோடு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆக்‌ஷன் காட்சியில் பல வில்லன் நடிகர்களோடு மோதும் விதமாக ஸ்டண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவர விருக்கும்'கடம்பான்பாறை'!

சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் "சீரன்" திரைப்படம்!!

பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" திரைப்படம் - பூஜையுடன் துவங்கியது!!

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments