Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப் போகிறதா அஜித்தின் ‘குட் பேட் அக்லி’?.. இதுதான் காரணமா?

vinoth
புதன், 5 பிப்ரவரி 2025 (09:47 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.   இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

அதனால் இரண்டு படங்களும் குறுகிய காலத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானால் அது எதாவது ஒரு படத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க சொல்லி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் இதுவரை ‘குட் பேட் அக்லி’ படத்தின் சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லையாம். அதனால் படத்தை மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யலாமா என ஆலோசித்து வருகிறதாம் படக்குழு. ஆனால் சன் தொலைக்காட்சியோடு சேட்டிலைட் பிஸ்னஸ் பேசப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியின் ‘கேம்சேஞ்சர்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’விடாமுயற்சி’ முதல் நாள் டிக்கெட் ரூ.500.. விநியோகிஸ்தர் நெருக்கடியால் பெரும் அதிருப்தி..!

வந்தவர்களுக்கும் நன்றி… வராதவர்களுக்கும் நன்றி… ஒத்த ஓட்டு முத்தையா பட நிகழ்ச்சியில் கவுண்டமணி கலகல பேச்சு!

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments