Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் ரிலீஸ் ரேசில் இருந்து விலகும் அஜித் படம்… பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (08:23 IST)
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘அஜித் 61’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் பின்னர் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மேலும் தாமதம் ஆகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் ரிலீஸாகும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு மோதும் சூழல் உருவானது.

ஆனால் இப்போது அஜித் 61 திரைப்படம் பொங்கலுக்குள் ரெடியாகாது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பேங்காங்க் சென்று ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ஹெச் வினோத் திட்டமிட்டுள்ளாராம். அந்த ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதே தெரியாத நிலையில் பொங்கலுக்குள் படம் தயார் ஆவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படம் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments