Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்ரா படத்தின் சண்டைக்காட்சிகளை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்-ஸ்டண்ட் மாஸ்டருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன இயக்குனர்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (20:04 IST)
இயக்குனர் அஜய் ஞானமுத்து ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.  ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது.

இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பராயன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து ‘இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். கோப்ரா படத்தின் உங்கள் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் காண ஆர்வமாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை… ஷங்கரின் கருத்துக்கு அனுராக் காஷ்யப் பதில்!

கேம்சேஞ்சர் படம் தோற்றது இதனால்தான்… தில் ராஜு சொன்ன காரணம்… ஏற்றுக்கொள்வாரா ஷங்கர்?

சிம்பு & ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

என்னுடைய படத்தில் சாய் பல்லவியைக் கதாநாயகியாக நடிக்கவைக்க ஆசைப்பட்டேன் – இயக்குனர் சந்தீப் ரெட்டி!

நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் மாதவன் & சித்தார்த்தின் ‘டெஸ்ட்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments