Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முசாஃபிர் ஆல்பம், பாலிவுட் அறிமுகம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:40 IST)
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முசாபிர் ஆல்பம் வெளியாவது குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பயணி ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பம் நான்கு மொழிகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர். படத்தின் தலைப்பாக ஓ சாத்தி ச்சால் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை தமிழில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் ஏற்கனவே வெளியாகிவிட்ட அவரின் பயணி ஆல்பம் இந்தியில் முசாஃபிர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதையடுத்து அந்த ஆல்பம் வெளியீட்டை முன்னிட்டு தனக்கு ஒத்துழைப்பு அளித்த பிரேரனா அனோரா உள்ளிட்ட அனைத்துப் படக்குழுவினருக்கும் நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

 
 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments