Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷுடனான விவாகரத்து அறிவிப்பு… பெயரை மாற்றிக் கொண்ட ஐஸ்வர்யா!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (16:58 IST)
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் தங்கள் 18 ஆண்டுகால மணவாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்து இருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா 18 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த தனுஷை காதல் திருமணம் செய்துகொண்டார். தனுஷை விட ஐஸ்வர்யாவுக்கு 2 வயது அதிகம் என்பதால் அப்போது அவர்களின் திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

அவர்களின் மணவாழ்க்கையில் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்கள் அவருக்கு இருக்கின்றனர். இந்நிலையில் 18 ஆண்டுகளாக நீடித்து வந்த மணவாழ்க்கையை சுமூகமாக முடித்துக் கொள்வதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. இதையடுத்து இரு வீட்டாரும் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா தனது பெயரை மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றிக் கொண்டுள்ளார். திருமணத்துக்கு பிறகு அவர் ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என தனது பெயரை வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

மீண்டும் தொடங்கிய LIK பட ஷூட்டிங்… ரிலீஸ் தேதி LOCK!

டெஸ்ட் படம் தோல்விக்குக் காரணம் இதுதானா?... எஸ் வி சேகர் வெளியிட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments