Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊர் ஊரா சுற்றும் ஐரா! கெத்து காட்டும் நயன்தாரா! குதூகலத்தில் ரசிகர்கள்!

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (15:35 IST)
முதல் முறையாக நயன்தாராவுக்கு வேறலெவல் புரோமோஷன்: 700 பஸ், 500 ஆட்டோ, 8 வேன் என்று ஊர் ஊரா சுற்றும் ஐரா!
 

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு, அந்த படங்களை ஹிட்டாக்கி வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் 'ஐரா'. இந்தப் படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா யமுனா, பவானி என  இரண்டு வேடங்களில் முதன்முறையாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம்  மிரட்டலான ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது.  சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் , ஸ்னீக் பீக் உள்ளிட்டவை ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.  
 

 
இந்த நிலையில், எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ஐரா படத்திற்கு1000 பதாகைகள், 700 பஸ், 500 ஆட்டோ, 8 வேன், பெரிய மாலில் எல்.இ.டி விளக்குகள் , டிஜிட்டலில் விளக்கு என்று பட்டயகிளப்பும் வகையில் படக்குழுவினர் புரோமோஷன் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மகாநடிகர்களான, எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், ரஜினியின் கபாலி ஏர் ஏசியா போன்று இந்த வாகனங்களின் மூலம், நயன்தாரா ஊர் ஊரா சுற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது இதுவே முதன்முறை என பரவலாக பேசப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments