Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் தமன்னா

மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் தமன்னா
, வியாழன், 12 ஏப்ரல் 2018 (11:37 IST)
விஜய் சேதுபதி நடிக்கும் தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் தமன்னா. 
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சை ரா நரசிம்மா ரெட்டி’. சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தான்  இந்தப் படம். சுரேந்தர் ரெட்டி இயக்கிவரும் இந்தப் படத்தை, ராம் சரண் தயாரிக்கிறார்.
 
சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, சுதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ்,  தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
 
இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் விஜய் சேதுபதியும்,  தமன்னாவும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படத்தில் காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் பிரியா பவானிசங்கர்