தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் பெரும் பொருட்செலவில் படமெடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களை வாய்பிளக்க செய்திடுவார். இவரது மகள் அதிதி ஷங்கர் வெளிநாட்டில் சென்று டாக்டர் பட்டம் பெற்றுவிட்டு தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகிவிட்டார்.
முதல் படமே கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கிவிட்டார். படம் ஹிட் ஆச்சோ இல்லையோ அவரது அலப்பறைகள் தான் சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாக பரவி வைரலானது.
அந்த படத்தை தொடர்ந்து மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இப்படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடிக்காததால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றவேண்டி கூறி இருக்கிறார்.
ஆனால், அதை இயக்குனர் காத்து கொடுத்து கேட்காததால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிதி ஷங்கர் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நடிப்பதால் மிகப்பெரும் வெற்றி அடையும் என பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாறிவிட்டதாக வருத்தத்தில் உள்ளாராம்.