Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2015 (15:47 IST)
தமிழ் திரையுலகின்  உடனடி தேவையை புரிந்து கொண்ட ஆதித்யராம், ஆதித்யாராம் ஸ்டுடியோஸ் என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார்.
 
தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் இடமாக தற்போது இவரின் ஆதித்யாராம் ஸ்டுடியோஸ் திகழ்ந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு புகாத படப்பிடிப்புதளமாக இருப்பது ஆதித்யாராம் ஸ்டுடியோஸுக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.
 
ஈ.சி.ஆர் சாலையில் இரண்டு பகுதிகளாக மொத்தம் இருபத்தைந்து ஏக்கரை உள்ளடக்கியது ஆதித்யாராம் ஸ்டூடியோஸ். இங்குதான் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான கமல்ஹாசனின் தசவதாரம் மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த, ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்கான அரங்குகள் அமைக்கப்பெற்று படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
 
தற்போது விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் புலி படத்தின் படப்பிடிப்பு பிரத்யேகமாக நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் புலி படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
 
ஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஆதித்யாராம் ஒரு தயாரிப்பாளர். இவர் தயாரித்த ஏக் நிரஞ்சன், குஷி குஷிகா, ஸ்வக்தம், சண்டதே சண்டதே படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

Show comments