Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா? - புகைப்படத்தால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (12:47 IST)
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமாகிய வரலட்சுமி சிலரால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 

 
போடா போடி, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வரலட்சுமி. நடிகர் விஷாலுக்கும், இவருக்கும் காதல் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்தன. சில மாதங்களுக்கு முன்பு சேவ் சக்தி என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு அமைப்பையும் வரலட்சுமி தொடங்கினார். 
 
இந்நிலையில், அவர் கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில், அவரின் செய்திகள் பரவியது. அதோடு, அவரை ஒரு கட்டிலில் கட்டி வைத்திருப்பது போல் புகைப்படமும் வெளியாகியது. #varalaxmiGotKidnapped என்கிற ஹாஸ் டேக்கும் டிவிட்டரில் பரவத் தொடங்கியது. இதனால், சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
இந்நிலையில், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய படத்திற்கான புரமோஷனுக்காகத்தான் இப்படி செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதுபற்றிய அறிவிப்பை  படக்குழுவினர் இன்று  மாலை அறிவிக்க உள்ளனர். ஆனால், அதற்கு முன் ஒரு விளம்பரத்திற்காகவே இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நல்லா பன்றீங்கா புரமோஷன்....

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments