Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் நேர்ந்த மரணம் - துக்கத்தில் மூழ்கிய குடும்பம்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (11:10 IST)
நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார். கோலிவுட்டின் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள இவர் திரையில் ஹிரோக்களுக்கு அம்மாவாக மட்டுமின்றி சில குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் ஹீரோயினாக நடித்ததை விட குணசித்திர வேடங்களில் குறிப்பாக ஹீரோக்களுக்கு அம்மாவாக  நடித்தது  தான் மார்க்கெட் உச்சத்தில் கொண்டு சேர்த்து. இந்நிலையில் தற்ப்போது நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஏ பி ராஜ் காலமாகியுள்ளார். மலையாள சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான இவர் அங்கு இதுவரை 65 படங்களுக்கு மேல் இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.

95 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல குறைவால் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று சென்னையில் காலமான செய்திகள் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது திரைபிரபங்கள் பலரையும் துக்கத்தில் மூழ்கடித்துள்ளது. தந்தை இழந்து வாடும் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

குடும்பத்த மொதல்ல பாருங்க… ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ!

இரண்டு பாகங்கள் இல்லை ஒரு பாகம்தான்.. கார்த்தி 29 படத்தில் நடந்த மாற்றம்!

அக்மார்க் சுந்தர் சி படம்… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மத கஜ ராஜா!

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… இப்போது எந்த நடுக்கமும் இல்லை எனக் கூறி விஷால் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments