Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு-தனுஷ் பட நடிகைக்கு காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி

Webdunia
வியாழன், 11 மே 2017 (23:02 IST)
சிம்புவுடன் 'குத்து', தனுஷூடன் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகை ரம்யா. இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே மாண்டியா தொகுதியின் எம்பியாக இருந்தவர். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர் தற்போது நடிக்கும் தொழிலை முழுமையாக விட்டுவிட்டு அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார்



 


இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் தற்போது நடிகை ரம்யாவுக்கு சமூக வலைத்தளங்களைக் கையாளும் குழுவின் தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளது.  ஏற்கெனவே, இந்த பொறுப்பை வகித்த ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் தொகுதி எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா தன்னை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அவருக்கு பதிலாக நடிகை ரம்யாவுக்கு அந்த பொறுப்பைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. சமூக வலைத்தளங்கள் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சியில் உட்கார வைக்கும் வரை ஓயமாட்டேன்' என்று ரம்யா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்த ப்ரதீப்பின் ‘டிராகன்’ படம்!

என்ன லிஸ்ட் கூடிட்டே போகுது… பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்!

இணையத்தில் பரவி வரும் ஐஸ்வர்யா ராய் மகளின் மார்ஃபிங் வீடியோ! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எனது 60 ஆவது படத்தை நானே இயக்குவேன்… சிம்பு அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments