Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டிக்கொடுக்க காசு கேட்கிறாரா ரம்யா பாண்டியன்? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (09:43 IST)
தனது கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் சமூகவலைதளத்தில் தனக்கென ஆர்மி உருவாக்கியுள்ள ரம்யா பாண்டியன் மீது ஒரு சர்ச்சையான புகார் எழுந்துள்ளது.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

அதனால் சின்னத்திரையில் தலைகாட்டி விஜய் டிவியின் குக் வித் கோமாளிஸ் என்ற சமையல் சம்மந்தமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டார். இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று அவரிடம் பேட்டிக்காக அணுகியபோது அவர்களை அதிர்ச்சியாக்கும் விதமாக ரம்யா பாண்டியன் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதில் ‘பேட்டி கொடுத்தால் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் ?’ எனக் கேட்டுள்ளாராம். இதைக்கேட்ட சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளர் அதிர்ச்சியாகி போனையே வைத்து விட்டாரம். ஆன்லைன் உலகம் தந்த புகழால் ரம்யா பாண்டியன் தன்னை அறியாமல் இப்படி நடந்து கொள்வதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments