Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை இழிவுபடுத்தி திருமாவளவன் பேசியது தவறு - நடிகை குஷ்பு குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (16:32 IST)
நாளை மனுதர்ம சாஸ்திரத்தை தடை செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நாளை பெண்களை இழிவாக பேசும் மனுதர்ம சாஸ்திரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவு படுத்திப் பேசியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து குஷ்பு கூறியதாவது:

ஒரு மதத்தைச் சார்த பெண்களை திருமாவளவன் இழிவுப்படுத்திப் பேசியது தவறு. கூட்டணியில் உள்ள திமுக,காங்கிரஸ் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன மறுத்துள்ள திருமாவளவன், தனது பேச்சினை திரித்து ஒரு கும்பல் பொய்யைப் பரப்புகிறது; அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

முருகதாஸ் & சல்மான் கான் படத்தில் சந்தோஷ் நாராயணன்..!

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

அடுத்த கட்டுரையில்
Show comments