Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கயல் ஆனந்திக்கு திருமணம்: மாப்பிள்ளை இந்த இயக்குனரின் மைத்துனர் தான்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (08:39 IST)
நடிகை கயல் ஆனந்திக்கு திருமணம்
தமிழ் நடிகைகளில் ஒருவரான கயல் ஆனந்திக்கு நேற்று திருமணம் நடைபெற்றது அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
பிரபுசாலமன் இயக்கிய கயல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ஆனந்தி அந்த படத்தின் வெற்றியின் காரணமாக கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டு வந்தார். மேலும் சண்டிவீரன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்பட பல திரைப் படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவருக்கும் ஆனந்திக்கும் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் வாரங்கல் என்ற பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் இரு தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருமணத்திற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று இரு தரப்பினர் மத்தியில் கூறப்பட்டுள்ளது. கயல் ஆனந்தியை திருமணம் செய்த சாக்ரடீஸ், இயக்குனர் நவீனின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அலாவுதீன் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் உள்பட ஒரு சில படங்களில் இணை இயக்குனராக பணி புரிந்துள்ளார் என்பதும், விரைவில் இவர் ஒரு படத்டை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments