Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை கனிகா அதிர்ச்சிக்குள்ளான செய்தி இதுதான்..!!!

நடிகை கனிகா அதிர்ச்சிக்குள்ளான செய்தி இதுதான்..!!!

நடிகை கனிகா அதிர்ச்சிக்குள்ளான செய்தி இதுதான்..!!!
, புதன், 19 அக்டோபர் 2016 (12:07 IST)
ஃபை ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. நான் என் கணவரை பிரிந்துவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது அவை வதந்தி என்று கூறியுள்ளார்.

 
இந்த வதந்தி தொடர்பாக கனிகா கூறுகையில், எனக்கும், ஷ்யாமுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு ரிஷி (வயது 5) என்ற மகன் இருக்கிறான். அவனை தமிழ் கலாச்சாரப்படி வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சென்னைக்கு வந்தேனே தவிர கணவரை பிரிந்து விடவில்லை.
 
நானும் என் கணவரும் நல்ல நண்பர்கள். எங்கள் மகன் தான் எங்களுடைய உலகம். நான் சைவம். ஆனால், என் கணவர் அசைவம். அவருக்காக நான் அசைவமாக மாறிவிட்டேன். எனவே என் கணவரை பிரிந்து விட்டதாக வெளியான இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாகவும், இது தொடர்பாக என் உறவினர்களும் என்னிடம் கேள்வி எழுப்பினர். நான், இது வெறும் வதந்தி தான் என்று அவர்களுக்கு பதில் தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணமாம்!!