Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகை கங்கனா ரனாவத்

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (11:46 IST)
வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி என்ற திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இவர்அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார் என்பது தெரிந்ததே 
 
பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இமாச்சல பிரதேச மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார்
 
மாண்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்றும் பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

பிரேம்ஜிக்கு இவர்தான் பொருத்தமான ஆளு… இன்ஸ்டா ரீலீல் ஜாலியாக கலாய்த்த இந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments