Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய நடிகை என்பதால் பாலிவுட்டில் ஒதுக்கல்.. நடிகை ஹன்சிகா சொன்ன அதிர்ச்சி கருத்து!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (08:37 IST)
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  ஹன்சிகா மோத்வானி. இவர், விஜய்யுடன் இணைந்து வேலாயுதம், எங்கேயும் காதல், சிம்புவுடன் இணைந்து வாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது 50 வது படமான  மஹா என்ற படம் வெளியானது. இந்த நிலையில், தன் நீண்ட  நாள் காதலரான சோஹைல் கதுரியாவுடன் திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.

வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஹன்சிகா பெரும்பாலும் நடித்து புகழ்பெற்றது தென்னிந்திய சினிமாக்களில். இத்தனைக்கும் அவரின் அறிமுகம் பாலிவுட் சினிமாவில்தான் அமைந்தது. இந்நிலையில் பாலிவுட்டில் தான் சந்தித்த ஒதுக்குதல்கள் பற்றி பேசியுள்ளார்.

இதுபற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “நான் தென்னிந்திய நடிகை என்பதால் எனக்கு பாலிவுட் காஸ்ட்யூம் டிசைனர்கள் ஆடை வடிவமைத்துத் தர மறுத்தனர். ஆனால் இப்போது சில ஆண்டுகளாக இந்த நிலைமை மாறியுள்ளது. இப்போது அவர்களாகவே முன்வருகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments