Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 வயதில் திருமணமாகி விவாகரத்து பெற்றதை மறைத்த அதிதி ராவ்! கணவர் இவர் தான்!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (12:32 IST)
மணிரத்தினம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் அதிதி ராவ். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் அந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.
 
இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாகவும்  மணிரத்தினம் இயக்கத்தில் "நவாப்" என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் படு பிசியாக நடித்து வரும் அதிதிக்கு தற்போது  32 வயதாகிறது. 
 
இந்நிலையில் தற்போது அதிதி ராவ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல், அதாவது இவர் தனது 21 வயதிலே திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து பெற்றவர் என்றால் நம்ப முடியுமா? ஆம், அதிதி ராவ் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டவர்.  ஆனால், தனக்கு திருமணமானதை முதலில் மறுத்த இவர் பின்னர் 2013 ஆம் ஆண்டு தனக்கு  21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடந்தது என்றும்,  பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டோம் என்றும் கூறினார்.


 
பாலிவுட் நடிகரான சத்ய தீப் மிஸ்ரா  ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் பின்னர் 2011ம் ஆண்டு வெளிவந்த "நோ ஒன் கில்லெட் ஜெஸிகா( No One Killed Jessica)" என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசியலுக்கு வந்தால் சுதந்திரம் பறிபோய்விடும்… பிரபல நடிகர் சோனு சூட் கருத்து!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் உருவான சிக்கல்!

ஜெயிலர் 2 படத்தில் இணையும் கே ஜி எஃப் பிரபலம்!

ஜெயிலர் 2 வுக்குப் பிறகு பேன் இந்தியா நடிகரோடு இணையும் நெல்சன்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments