Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேடையில் பேசியதை வடிவேலு தவறாக எடுத்துக் கொண்டார் – அப்படி என்ன பேசினார் விவேக் ?

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (11:46 IST)
மேடையில் வடிவேலுவை பற்றி ஜாலியாகப் பேசியதை அவர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார் நடிகர் விவேக்.

நகைச்சுவை நடிகர்கள் விவேக்கும் வடிவேலுவும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதன் பின்னர் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்த போதும் தங்களுக்கான பாணியை உருவாக்கிக் கொண்டு ஜாம்பவான்களாக மாறினர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் விவேக்கிடம் தொகுப்பாளர் உங்களுக்கும் வடிவேலுவுக்கும் இடையில் சேர்ந்து நடிக்கும்போது ஏதாவது பிரச்சனை எழுந்துள்ளதா எனக் கேட்டபோது ‘இல்லை. ஏனென்றால் நான் நகரத்து படித்த இளைஞன் பார்வையில் நடிப்பேன். அவரோ கிராமத்து மனிதர் பார்வையில் நடிப்பார். இருவருக்குமான பாணி வேறு வேறு. ஒரு முறை மேடையில் அவர் பேசும்போது ‘நல்லா பேசறியா… நேத்து நைட்டே எழுதி வச்சுட்டியா?’ எனக் கேட்டேன். அதை மட்டும் அவர் தவறாக நினைத்துக்கொண்டார் என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments