Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"மாமியாருக்கு சோப்பு போட்டது ரொம்ப பிடிக்கும்" - விஜய் அளித்த பேட்டியை கலாய்க்கும் அஜித் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (14:10 IST)
தமிழ் சினிமாவில் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் நடிகர் அஜித் - விஜய். இருவருக்கும் தமிழகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இருவரின் படங்கள் ரிலீஸ் என்றாலே அன்று அவர்களது ரசிகர்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம் தான்.
 

 
தொழில் ரீதியாக இருவருக்கும் போட்டிகள் நிலவி வந்தாலும் நட்பு ரீதியாக இருவரும் நல்ல நண்பர்கள். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக்கொண்டு  அடிக்கடிசண்டையிட்டு கொள்வார்கள். 
 
அந்தவகையில் தற்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் அளித்துள்ள பேட்டி வீடியோ ஒன்றை அஜித் ரசிகர்கள் மோசமாக கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகர் விஜய்யிடம் தொகுப்பாளினி " நீங்கள் ரொம்ப அனுபவித்து நடித்த படம் எது என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த விஜய், "ரசிகன் படத்தில் பொண்ணுனு நெனச்சி மாமியாருக்கு சோப்பு போட்டு விடுவேன். அந்த காட்சியை நான் ரசித்து பண்ணேன்’ என்று கூறியுள்ளார். 
 
பல ஆண்டு கழித்து தற்போது அஜித் ரசிகர்கள் கையில் சிக்கிய இந்த வீடியோ வைத்து நடிகர் விஜய்யை படுமோசமாக கிண்டலடித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments