Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவுக்கு இங்கிலிஷ் கற்றுக்கொடுக்கும் நடிகர் சூரி மகள் - வீடியோ!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (07:57 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.  

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி கடந்த சில தினங்களாகவே தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு சமைப்பது, குளிப்பாட்டுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டிருந்தார். தற்போது அவரது செல்ல மகள்,  சூரிக்கும் அவரது தம்பிக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கும் அழகிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments