Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானி அல்லு அர்ஜுன் இடையே போட்டியா? பதிலளித்த நடிகர் ராணா!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:14 IST)
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெய்பீம் படத்திற்கு விருது அளிக்காதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் எந்த விருதும் பெறவில்லை. இதனால் தேசிய விருது மீது பல்வேறு விவாதங்கள் கிளம்பியது. ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்காதது குறித்து தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஸ்டோரி வைத்துள்ளார்.

இதையடுத்து அவர் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற அல்லு அர்ஜுனுக்கு எதிராகதான் இந்த கருத்தை நானி பதிவு செய்துள்ளார் என்று தெலுங்கு சினிமாவில் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மற்றொரு தெலுங்கு நடிகர் ராணா “எல்லோருக்குமே தங்கள் கருத்தை சொல்ல உரிமையுண்டு. பலரும் ஜெய்பீம் திரைப்படம் விருது வெல்லும் என நினைத்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட விருதுகள் மீதான விமர்சனம் அல்ல. அதனால் நானியின் ட்வீட்டில் எந்த சர்ச்சையும் இல்லை. அது வெறும் ட்வீட் மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹன்சிகாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் புகைப்பட ஆல்பம்!

விண்டேஜ் லுக்கில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!... கார்ஜியஸ் ஆல்பம்!

சஞ்சய் & சந்தீப் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

பொறுத்தது போதும் என இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

இன்று வெளியாகிறது மம்மூட்டி & கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments