Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' அந்த பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம் ''- நடிகர் ரஜினிகாந்த்

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (13:02 IST)
குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம் என்று  நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படம்  பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் முதல் சிங்கில் காவாலா, 2 வது சிங்கில் குஹூம், 3 வது சிங்கில் ஜுஜுபி நேற்று முன்தினம்  ரிலீஸானது. இந்த நிலையில்  நேற்று இப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. அதில்,  இப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ரன்னிங் டைம் எனவும்,  யு/ஏ சான்றிதல் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இப்படத்தில் இசை வெளியீட்டு விழா,  நேற்று, சென்னை   நநேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பிரமாண்டமாக நடைபெRRa இந்த நிகழ்ச்சியில்  நடிகர் ரஜினிகாந்த், அனிருத், நெல்சன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  ''மது அருந்தினால் மூளை சரியாக வேலை செய்யாது. சரியான முடிவு எடுக்க முடியாது. இதனால் குடும்பமும் பாதிக்கும்…  நான் மது அருந்தியதால் நிறைய இழந்திருக்கிறேன்… அனுபவத்தில் கூறுகிறேன் மது அருந்தாதீர்கள்'' என்று கூறினார்.

மேலும்,  ''இந்தக் குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதைவிட எங்கோ இருந்திருப்பேன்…குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments