Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட பிருத்விராஜ்! உருக்கமான பதிவு!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (09:57 IST)
ஜோர்டானில் மாட்டிக்கொண்டுள்ள நடிகர் பிருத்விராஜ் நல்ல உணவை சாப்பிட முடியவில்லை என சமூகவலைதளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றியது. இந்த படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுழ்வினர்.

அப்போது கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதால் விமானங்கள் முடக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் அந்த நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாத சூழலுக்கு ஆளானார்கள். அவர்களை இப்போது அங்கிருந்து மீட்டு வர முடியாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிருத்விராஜ் ‘கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் குடும்பத்தாருடன் ருசியான மதிய உணவை சாப்பிட்டேன். ஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு இல்லாமல்,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உறவுகளை பிரிந்து வாடுகிறேன். விரைவில் எல்லாம் முடிந்து ஒன்று சேரும் காலம் வரும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே… மாளவிகாவின் கலர்ஃபுல் போட்டோஸ்!

வார இறுதி நாட்களில் பிக்கப் ஆகும் பாலாவின் ‘வணங்கான்’… டிக்கெட் புக்கிங் அதிகரிப்பு!

என் படங்கள் சரியாக ஓடவில்லை… ஆனால் தவறு என்னுடையது இல்லை –ஜெயம் ரவி ஓபன் டாக்!

அதர்வாவின் ‘DNA’ படத்துக்கு ஐந்து இசையமைப்பாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments