Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாயாங் கு.... ஆங்கிரி பேர்ட்... பயப்படாதீங்க இதெல்லாம் பாடல்தான்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2015 (16:38 IST)
நீண்ட நாளைக்குப் பிறகு மகன் நடிக்கும் படம். பணத்தை தண்ணீராக இறைத்துக் கொண்டிருக்கிறார் தியாகராஜன். அவர் ஒரு பாடலுக்கு செலவிடும் பணத்தில் பத்து காக்கா முட்டை தயாரிக்கலாம்.
பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம், சாஹசம். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நர்கிஸ் பக்ரி ஆடினார். இரண்டு பாடல்களை மலேசியா மற்றும் ஜப்பானில் எடுத்துள்ளனர். கடந்த 20 நாள்களாக இந்த இரு பாடல் காட்சிகளைதான் இயக்குனர் அருண்ராஜ் வர்மா படமாக்கினார். 
 
மலேசியாவில் படமாக்கப்பட்ட பாடல், சாயாங் கு என தொடங்குகிறது. இதற்கு என்ன அர்த்தம் என்று மலேயா பாஷை தெரிந்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஜப்பானில் படமாக்கப்பட்ட பாடல், ஆங்கிரி பேர்ட் என தொடங்குகிறது. தமன் இசை.
 
தியாகராஜன் படத்தை தயாரிப்பதோடு திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார். தெலுங்குப் படம் ஒன்றின் தழுவல் சாஹசம் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

பிரேம்ஜிக்கு இவர்தான் பொருத்தமான ஆளு… இன்ஸ்டா ரீலீல் ஜாலியாக கலாய்த்த இந்து!

Show comments