Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கையாக நடிக்கும் ரஜினி பட நடிகர்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (18:29 IST)
நவாசுதீன் சித்திக் தற்போது ஒரு படத்தில்   திருநங்கை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகிறது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்   நவாசுதீன் சித்திக். இவர்,  படாங் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர், பிளாக்வெள்ளி, கேங்ஸ் ஆப் வாஸ்யெப்பூர், ராமன் ராகவ் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தபோதிலும்,  ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நவாசுதீன் சித்திக். இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார்.

வித்தியாசமான படங்கள், கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் நவாசுதீன் சித்திக், தற்போது ஒரு படத்தில்   திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில்  நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் 'ஹத்தி' என்ற படத்தில், அவர்   திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், கையில் கத்தியுடன் உட்கார்ந்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹம்சவிர்தன் நடிக்கும் திரைப்படமான 'மகேஸ்வரா' படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது விபத்து!

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments