Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த ஜோசியனாவது கொரோனா வரும்னு சொன்னானா?... தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆக்ரோஷமான நடிகர் மாரிமுத்து!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (09:38 IST)
கடந்த சில ஆண்டுகளாக ஜீ தமிழ் சேனலில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகரும் இயக்ககுனருமான கரு பழனியப்பன், அந்நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளரோடு இப்போது நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நாளை ஒளிபரப்பாக உள்ள அடுத்த எபிசோட்க்கான ப்ரோமோ இப்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த எபிசோட் ஜோசியம் vs  மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடக்க, சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து கலந்துகொண்டுள்ளார்.

அவர் ஜோசியத்துக்கு எதிராக ஆவேசமாக பேசும் ப்ரோமோவில் “எந்த ஜோசியனாவது சென்னை வெள்ளத்தில் மூழ்கும்னு கண்டுபிடிச்சு சொன்னானா? எந்த ஜோசியனாவது கொரோனா வரும்னு சொன்னானா?” என ஆவேசமாக பேசுகிறார். இதையடுத்து அந்த எபிசோட்டை பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் இடையே உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments