Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் இயக்கத்தில் முதல்முறையாக நடிக்கும் ஜெயராம்!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (14:09 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கி நடக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் முதல் கட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் ஜெயராம் சரோஜா உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments