Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழு.. வாழ விடு..! பைக் ரைட் போக வழிய விடு! – பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய அஜித்!

Webdunia
திங்கள், 22 மே 2023 (13:12 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்குமார் புதிதாக பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பைக்கில் சாகச பயணம் செல்வதில் அஜித் குமார் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். விரைவில் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பைக் பயணம் செய்ய அஜித்குமார் திட்டமிட்டு வருகிறார்.

பல்வேறு இளைஞர்களும் சமீபமாக பைக் பயணங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் ஒரு பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்க உள்ளதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

AK Moto Ride என்ற இந்த புதிய சுற்றுலா நிறுவனம் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பைக் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் “ 'வாழ்க்கை ஒரு அழகான பயணம்‌. அதன்‌ எதிர்பாராத தருணங்கள்‌, திருப்பங்கள்‌ மற்றும்‌ திறந்த பாதைகளைக்‌ கொண்டாடுங்கள்‌'. இந்த மேற்கோளை நான்‌ நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்‌.


 
மோட்டார்‌ சைக்கிள்கள்‌ மற்றும்‌ வெளிப்புறங்களில்‌ எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும்‌ விதத்தில்‌ ஏகே மோட்டோ ரைடூ  என்ற மோட்டார் சைக்கிள்‌ சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன்‌ என்பதை பகிர்ந்து கொள்வதில்‌ மகிழ்ச்சி அடைகிறேன்‌.

இந்தியாவின்‌ இயற்கை எழில்‌ கொஞ்சும்‌ நிலப்பரப்புகளில்‌ மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும்‌ பயணம்‌ மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ்‌, சாகச ஆர்வலர்கள்‌ மற்றும்‌ பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடூ சுற்றுப்பயணங்களை வழங்கும்‌.

பாதுகாப்பு மற்றும்‌ செளகரியத்தில்‌ அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன்‌ சுற்றுப்பயணங்கள்‌ முழுவதிலும்‌ நம்பகத்தன்மை மற்றும்‌ செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும்‌ சாகச சுற்றுலா சூப்பர்‌ பைக்குகளை ஏகே மோட்டோ ரைடூ வழங்கும்‌.

தொழில்முறை வழிகாட்டிகள்‌, மோட்டார்‌ சைக்கிள்‌ சுற்றுப்பயணங்களின்‌ நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள்‌ மற்றும்‌ உள்ளூர்‌ பழக்கவழக்கங்கள்‌ மற்றும்‌ மரபுகள்‌ பற்றிய விரிவான அறிவைக்‌ கொண்டவர்கள்‌ தொடக்கம்‌ முதல்‌ இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும்‌ அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள்‌” என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவதூறு: பிரபல யூடியூபர் மீது வழக்குப் பதிவு!

என்னுடைய புகைப்படத்தை காட்டினால் ஏமாந்துவிடாதீர்கள்.. நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு..!

அடியாத்தி நான் இப்ப ஃபெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் க்யூட் போட்டோஸ்!

ஷிவாணி நாராயணனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

ரஜினி சாருக்கு நான் துருவ நட்சத்திரம் கதையைதான் சொன்னேன்… கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments