Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்படத்தில் நடிக்கும் முன்னாள் முதலமைச்சர்

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (13:25 IST)
கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன், அட் ஒன்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
அச்சுதானந்தன் கேரள கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவர். கம்யூனிஸ்ட்கள் இந்திய அரசால் வேட்டையாடப்பட்ட காலத்தில் போலீஸின் கடும் சித்திரவதைகளை எதிர்கொண்டவர். மலையாள சேனல்களில் இவரைப் போல் வேடமணிந்த மிமிக்ரி கலைஞர்கள், அச்சுதானந்தனை அச்சு மாமா என்ற பெயரில் கலாய்ப்பது உண்டு. அச்சுதானந்தன் போல் பேசி நடிக்க மட்டும் கேரளாவில் இரண்டு டஜன் மிமிக்ரிக்காரர்கள் இருக்கிறார்கள்.
 
அச்சுதானந்தனை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயன்றனர். யாருக்கும் பிடி கொடுக்காதவர் உஸ்மான் என்ற புதுமுக இயக்குனரின் அட் ஒன்ஸ் என்ற திரைப்படத்தில் அச்சுதனந்தனாகவே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 
 
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
 

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

Show comments