Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகை!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:43 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ப்ரமோ வீடியோவில் கமல் பேசும் வசனத்தில் “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்” என சொல்ல, ஏன் ஜாதிப் பெயரை வைத்து தொடர்ந்து கமல் படங்கள் எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் எதிர் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளைக் கடந்தும் அந்த ப்ரமோஷன் வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் 1.5 கோடி பேருக்கும் மேல்  இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகையான அபிராமி இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அவர் கமல்ஹாசனுடன் கடைசியாக விருமாண்டி படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments