Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90களில் நடந்த உண்மை த்ரில்லர் சம்பவம்! – கவனம் ஈர்க்கும் சசிக்குமாரின் அடுத்த படம்!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (15:12 IST)
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில்,  கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


 
90களில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பினை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.  கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகிறது. 90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவரப் படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது.

90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப்  படக்குழு படமாக்கி வருகிறது.

இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல்  ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இவர்களுடன் பருத்திவீரன் சரவணன்,கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு.ராமசாமி,ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராம், முதல் முறையாக விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படப்பின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு, டீசர் , டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் தமிழக விநியோக உரிமை இவ்வளவு கோடியா?

விரைவில் அமரன் படத்தின் 100 ஆவது நாள் விழா.. பிரம்மாண்டமாகக் கொண்டாட திட்டமிடும் கமல்ஹாசன்!

சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்துக்கு விரைவில் டீசர் ஷூட்டிங்… வெளியான தகவல்!

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments