Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்த மாணவர்! வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (13:19 IST)
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழில் ‘8 தோட்டாக்கள்’, ‘சூரைரை போற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் அபர்ணா பாலமுரளி. தற்போது இவர் நடித்துள்ள தங்கம் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தங்கம் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க மாணவர் ஒருவர் அழைக்கப்பட்டார். அவர் பூங்கொத்தை கொடுத்து புகைப்படம் எடுத்தபோது அபர்ணா தோள் மீது கையை போட முயன்றார்.

ஆனால் அபர்ணா அதனால் சங்கோஜப்பட்டு அதை தவிர்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர் அனுமதி இல்லாமல் அவர் தோள் மேல் கைவைக்க முயன்றது தவறு என்றும், அதை கண்டிக்காமல் படக்குழுவினர், கல்லூரி நிர்வாகம் இருந்தது குறித்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!

’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி.. தியேட்டரில் அதிரடி கைது..!

வெற்றிமாறனை இயக்குனர் சிகரம் என வர்ணித்த வன்னி அரசு.. கே பாலசந்தர் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments