Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல படங்களை இயக்கிய பின்னரும் பாலாவுக்கு இணை இயக்குனராக ஏ எல் விஜய்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (14:39 IST)
சூர்யா பாலா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்ற ஏ எல் விஜய் முடிவு செய்துள்ளாராம்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தை இயக்குகிறார்.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

இதையடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே இழுபறியாக உள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் சூர்யா பாலா தரப்பை இணக்கமாக செய்யும் பொருட்டு இயக்குனர் ஏ எல் விஜய்யை இணை இயக்குனராக இந்த படத்தில் பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. பல படங்களை இயக்கினாலும் எந்த ஈகோவும் பார்க்காமல் ஏஎல் விஜய் இந்த பணியை ஏற்றுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்… லேட்டஸ்ட் ஆல்பம்!

படம் கனெக்ட் ஆகுமா என பயந்தேன்.. ஆனால்?- மத கஜ ராஜா குறித்து திருப்பூர் சுப்ரமணியம் பாராட்டு!

கதையில சாவுன்னு இருந்தாலே என் பெயரை எழுதிடுறாங்க… மேடையில் கலகலப்பாக பேசிய கலையரசன்!

ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் தமிழக விநியோக உரிமை இவ்வளவு கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments