Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைர வியாபாரி கொலை வழக்கில் பிரபல நடிகை கைது

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (11:43 IST)
மும்பையைச் சேர்ந்த பிரபல வைரவியாபரி கொலை வழக்கில் பிரபல டிவி நடிகை டிவோலினா  கைது செய்யப்பட்டார்.


 
மும்பை காட்கோபர் பந்த் நகரை சேர்ந்தவர் வைர வியாபாரி ராஜேஷ்வர். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் காணவில்லை. இது தொடர்பாக. ராஜேஷ்வரின் மனைவி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடந்த வந்தது.
 
இந்த நிலையில் பன்வெல் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியில் ராஜேஷ்வர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.. ராஜேஷ்வர் செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.
 
இந்நிலையில் மராட்டிய மாநில அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் முன்னாள் உதவியாளர் சச்சின் பவார் மற்றும் டி.வி. நடிகையும் மாடல் அழகியுமான டிவோலினா பட்டாச்சார்ஜி உள்பட மேலும் 3 பேருக்கும் ராஜேஸ்வர் கொலையில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.  அவர்களை பிடித்து வந்து காட்கோபர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக 3 மணிநேரம் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.
 
. டிவோலினா, ‘சாத் நிபானா சாதியா’ உள்பட பல டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து வேறு யாருக்கேனும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments