Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 பி.எம். டூ 6 ஏ.எம். - இன்னொரு ஆவி படம்

Webdunia
வியாழன், 31 ஜூலை 2014 (15:48 IST)
கடவுளர்கள் காலாவதியாகி ஆவிகளின் சாம்ராஜ்ஜியமாகியிருக்கிறது தமிழ் சினிமா. தயாராகிற பத்து படங்களில் ஆறு ஆவியை பற்றியது. அந்த வரிசையில் இன்னொரு ஆவி படம்தான் இந்த 6 பி.எம். டூ 6 ஏ.எம்.
 
இரண்டு பெண்கள் ஒரே நேரத்தில் ஒரு ஆணை காதலிக்கிறார்கள். இதனால் இருவருக்குள்ளும் போட்டி பொறாமை. ஒருகட்டத்தில் ஒரு பெண் தனது தோழியையும், அவர்கள் காதலித்தவனையும் கொன்று தன்னையும் அழித்துக் கொள்கிறாள். ஆ... என்ன பயங்கரமான கதை? 
ரிலாக்ஸ்... கதை இனிதான் ஆரம்பமாகிறது. அப்படி கொலை செய்யப்பட்ட ஆணும், பெண்ணும் வேறொரு இடத்தில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்களை கொலை செய்ய அவர்களை ஏற்கனவே கொலை செய்த பெண் ஆவி உருவில் வருகிறாள். ஆவியிடம் சிக்கும் ஜோ‌டியின் கதை என்ன என்பதுதான் இந்தப் படம். 
 
ஒரேயிரவில் கதை நடக்கிறது. கதையின் நாயகனாக நடிக்கும் அஸ்கார், மம்முட்டியின் அக்கா பையனாம். ஆள் பார்க்க மம்முட்டியின் மிடுக்குடன் இருக்கிறார். சூரிய கிரண், கௌரி கிருஷ்ணா நாயகிகள்.
 
படம் வந்த வேகத்தில் ஆவியாகுமா இல்லை ரசிகர்களை பிடித்தாட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments