Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தயாரித்துள்ள 50 பிரச்சார வீடியோக்கள்: விஜயதசமியில் வெளியீடா?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்றும் அப்படியே தொடங்கினாலும் இந்த கொரோனா காலத்தில் அவரால் வீட்டை விட்டு வெளியே வந்து பிரச்சாரம் செய்ய முடியாது என்றும் அவருக்கு எதிரானவர்கள் செய்திகளை பரப்பி வந்தனர் 
இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவர் பிரச்சாரத்திற்கு நேரடியாக அனைத்து இடங்களிலும் செல்ல முடியாவிட்டாலும் ஒரு சில முக்கிய இடங்களுக்கு மட்டும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய பகுதிகளிலும் பிரம்மாண்டமான கூட்டத்தில் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கு முன்னதாகவே ரஜினி கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை குறித்த பிரச்சார வீடியோக்கள் தயாராகி உள்ளதாக தெரிகிறது எ
 
ரஜினிகாந்த் பேசிய 50 பிரச்சார வீடியோக்கள் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் முதல் வீடியோ வரும் விஜயதசமி அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இரண்டு வரிகளில் ஒரே ஒரு டுவீட் போட்டாலே சமூக வலைதளங்கள் ஸ்தம்பித்துப் போகும் என்ற நிலையில் தற்போது 50 பிரச்சார வீடியோக்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments