Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்க சிவந்த வானம்: அதிகாலை காட்சி திடீர் ரத்து

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (20:16 IST)
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் சென்னையில் ஒருசில திரையரங்குகளில் 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிம்பு மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஐந்து மணி காட்சிக்கு விறுவிறுப்பாக முன்பதிவு செய்ததால் ஐந்து மணி காட்சியின் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை காசி திரையரங்கம் நாளை திட்டமிட்டிருந்த 5 மணி காட்சியை திடீரென ரத்து செய்துவிட்டது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மேலும் மற்ற திரையரங்குகளில் நிலை இன்னும் முடிவாகவில்லை. எனவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே அதிகாலை காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டு பின் ரத்து செய்வது அடிக்கடி நிகழ்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' திரைப்படமும் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டு பின் முதல் காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் சாம்பியன் குகேஷை சந்தித்து பரிசளித்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையை மம்மூட்டியை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்!

மீண்டும் தாணு தயாரிப்பில் படம் நடிக்கும் விஜய் சேதுபதி!

சல்மான் கான் பிறந்தநாளில் வெளியாகும் ‘சிக்கந்தர்’ ப்ரமோஷன் வீடியோ!

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments