Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தம வில்லன் 3 காட்சிகள் ரத்து

Webdunia
வெள்ளி, 1 மே 2015 (13:55 IST)
இன்று வெளியாவதாக இருந்த உத்தம வில்லன் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை. பணப் பிரச்சனை காரணமாக படத்தை வெளியிட முடியவில்லை.
 
தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்ட போது அதிகாலை ரசிகர்களுக்கான காட்சி மட்டுமே ரத்து செய்யப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என கூறப்பட்டது.
 

 
ஆனால், இன்று முதல் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சில திரையரங்குகள் அறிவித்துள்ளன. மாலை ஆறு மணி காட்சி நடைபெறுமா என்பதே இன்னும் சந்தேகமாகதான் உள்ளது. 
 
இன்று 400 திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. மேலும், ஐந்து காட்சிகள் திரையிட திரையரங்குகள் முடிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

Show comments