Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சர்கார்' படத்தின் மொத்த வசூலை ஐந்தே நாட்களில் முறியடித்த '2.0'

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் ஏற்கனவே 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த வாரத்திற்குள் உலகம் முழுவதும் ரூ.550 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் வசூல் செய்த மொத்த தொகையை '2.0' திரைப்படம் ஐந்தே நாட்களில் முறியடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வளவிற்கு பெங்களூர் உள்பட ஒருசில இடங்களில் வாட்டாள் நாகராஜ் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் '2.0' என்ற சாதனை ஏற்பட்டுள்ளது. இந்த சாதனையை இனிவரும் 'விஸ்வாசம்' மற்றும் 'பேட்ட' படங்கள் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கர்நாடக மாநிலத்தில் முதல் நாளில் சர்கார் ரூ.4.5 கோடியும், '2.0' திரைப்படம் முதல் நாளில் ரூ.7.6 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments