Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் ‘2018’ திரைப்படம்!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:51 IST)
இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக 2018 படம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.

இதையடுத்து இந்த படத்தை அமெரிக்காவில் ப்ரமோட் செய்யும் விதமாக இப்போது தெற்கு அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான வேலையில் இப்போது படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படமாக ‘2018’ படம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்.. மணமகள் டாக்டரா?

மீண்டும் இணையும் ராம் - ஜானு.. விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!

லஞ்சம் வாங்கியவரை கைது செய்யாமல் மாநகராட்சி பணியில் அமர்த்துவதா? அன்புமணி ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments