Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் யாமிருக்க பயமே இரண்டாம் பாகம்?

Webdunia
புதன், 4 ஜூன் 2014 (19:41 IST)
சமீபத்தில் வெளியான படங்களில் சர்ப்ரைஸ் ஹிட் யாமிருக்க பயமே. கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி நடிப்பில் டி கே இயக்கியிருந்த இந்தப் படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரித்திருந்தது.
 
ஹாரர் காமெடிப் படமான இதற்கு சென்சாரில் யுஏ சான்றிதழே கிடைத்தது. யு கிடைக்காததால் 30 சதவீத வரிச்சலுகையை படம் இழந்தது. விநியோகஸ்தர்களும் படத்தை வாங்க முன்வரவில்லை. அதனால் எல்ரெட் குமார் சொந்தமாக தனக்குத் தெரிந்த விநியோகஸ்தர்களின் வழியாக சதவீத அடிப்படையில் படத்தை வெளியிட்டார்.
இன்றைய தேதிவரை படத்தை வெளியிட்ட எந்தத் திரையரங்கும் படத்தை தூக்கவில்லை. ரசிகர்கள் குடும்பமாக வந்து இந்த ஹாரர் படத்தைப் பார்த்து சிரித்துவிட்டு செல்கிறார்கள். விளம்பரம் எல்லாம் சேர்த்து ஐந்து கோடியில் தயாரான படம் எட்டு கோடிவரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திரையரங்கு வசூல். ஸீ தமிழ் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை 3 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுதவிர தெலுங்கு, இந்தி, கன்னட ரீமேக் உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள் இருக்கின்றன.
 
குறைந்த பட்ஜெட்டில் தயாராகி கொழுத்த லாபம் சம்பாதித்து தந்த தங்க வாத்தை அப்படியே விட்டுவிட மனம் வருமா? படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்கள். எல்ரெட் குமாருக்காக டி கே அடுத்தப் படத்தை இயக்குகிறார். அது இந்தப் படத்தின் சீக்வெலாக இருக்கும் என்கிறார்கள்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments