Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பிறந்தநாளில் கத்தி டீஸரை வெளியிடும் முருகதாஸ்

Webdunia
வியாழன், 5 ஜூன் 2014 (13:22 IST)
துப்பாக்கி, கத்தி படங்களில் விஜய்யுடன் பணிபுரிந்ததில் விஜய்யின் நெருக்கத்துக்கும் விருப்பத்துக்கும் உரியவராக மாறியிருக்கிறார் முருகதாஸ். தமிழில் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு தயக்கமில்லாமல் விஜய்யின் பெயரைதான் சொல்கிறார்.
நாளை துப்பாக்கியின் இந்தி தழுவல் ஹாலிடே வெளியாவதை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு முன்பே கத்தி படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஹாலிடேயின் பிரமோஷனுக்காகதான் இந்த விடுமுறை.
 
கத்தியில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளனர். கொல்கத்தாவில் தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை என்று தொடர்ந்து நடந்தது. சென்னை விமான நிலையத்திலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. ஐங்கரனும் லைகா புரொடக்ஷனும் இணைந்து கத்தியை தயாரிக்கின்றன. அனிருத் இசை. 
 

இந்தப் படத்தில் தீவிரவாதியாகவும், நல்லவராகவும் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதி விஜய் கடத்தி வைத்திருக்கும் பொதுமக்களை நல்லவரான விஜய் காப்பாற்றுவதாக கதை பின்னப்பட்டுள்ளது என்கிறார்கள்.
தீபாவளிக்கு கத்தி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் கத்தி டீஸர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 வெளியாகும் என முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments