Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டு முருகனை வம்புக்கிழுக்கும் இரண்டு முருகன்கள்

Webdunia
புதன், 4 ஜூன் 2014 (19:58 IST)
ரஜினியின் புகழ்பெற்ற என்வழி தனிவழி பன்ச் டயலாக்கை தனது படத்தின் பெயராக்கியிருக்கிறார் ஆர்கே. படத்தை இயக்குகிறவர் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ். 
 
இவரது இயக்கத்தில் ஆர்கே எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தார். அதில் அவருக்கு வழக்கறிஞர் வேடம். அந்தப் படத்தை இன்றும் ரசிகர்களின் ஞாபகத்தில் வைத்திருப்பது வடிவேலுவின் காமெடி. வட்ட செயலாளர் வண்டு முருகனாக அவர் அடித்த கூத்துகளை மறக்க முடியாது. 

சரி, இந்தப் படத்தில்?
 
வடிவேலு ஹீரோவாகி எட்டாத உயரத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவரை அணுக முடியாது. அதனால் அவருக்குப் பதில் சிங்கமுத்து, தம்பி ராமையா என்று இரண்டு பேர்களை நடிக்க வைத்துள்ளனர். காமெடிக்கு நடுவில் வடிவேலுவை வாருகிற சில டயலாக்குகளையும் எடுத்துவிட்டிருக்கிறாராம் சிங்கமுத்து.
 
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆர்கே. அவருக்கு இரண்டு ஜோ‌டிகளாம்.
 
கலக்குங்க பாஸ்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments